அத்தா பவுண்டேஷன்: வறுமை ஒழிப்பு மற்றும் கல்வி உதவி மூலம் பின்தங்கிய மக்களின் வாழ்வில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கப் பாடுபடுகிறோம்.
இந்த மாதம் 1,200+ ஆர்வலர்கள் எங்களுடன் இணைந்துள்ளனர்
என்னதான் நம் நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்தாலும், தமிழ்நாட்டு பொருளாதாரத்தில் நடை வளர்ச்சி அடைந்தாலும், இன்னும் பல ஊர்களில் வறுமை இருக்கத்தான் செய்கிறது. அரசின் நலத்திட்டங்கள் இன்னும் நிறைய மக்களிடம் சென்று அடையவில்லை என்பதுதான் உண்மை.
பல ஆண்டுகாலமாக என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை நான் மக்களிடம் நாடி பணமாக பெற்று பலருக்கு உதவி செய்து வந்தாலும், அது முறையாக செய்ய இப்போதுதான் காலம் கனிந்து வந்துள்ளது. கணவரால் கைவிடப்பட்ட குழந்தைகள், தாய் தந்தை இழந்த குழந்தைகள், விதவைக் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு கல்வி சார்ந்த உதவிகளை செய்வது எங்களது முக்கிய கடமையாகும்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு நிதி, உணவு மற்றும் அடிப்படை தேவைகள் வழங்குதல்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வாழ்க்கை ஆதரவு வழங்குதல்.
ஏழை பெண்களுக்கு திருமண உதவி மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல்.
செயற்கை உறுப்புகள், வீல் சேர் மற்றும் வாழ்வாதார உதவி வழங்குதல்.
மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீனவர் குடும்பங்களுக்கான சமூகத் திட்டங்கள்.
வேளாண்மை கருவிகள், விதைகள் மற்றும் உரங்கள் வழங்கி விவசாயிகளை ஆதரித்தல்.
மரநடுகை திட்டங்கள், பசுமை வளர்ச்சி மற்றும் நீர் பாதுகாப்பு முயற்சிகள்.
முதியோருக்கு உணவு, உடை, மருந்து உதவி மற்றும் இல்லம் பராமரித்தல்.
அன்னதானம், குடிநீர் வசதி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துதல்.
அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல் மற்றும் விழிப்புணர்வு.
பிற NGO-களுடன் இணைந்து சமூக சேவையை விரிவுபடுத்துதல்.
நன்கொடைகளை வெளிப்படையாகவும் சமூக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்துதல்.
உங்களின் சிறு பங்களிப்பு, பின்தங்கிய மக்களின் வாழ்வை ஒளிரச் செய்வதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அத்தா பவுண்டேஷனுடன் இணையுங்கள்.
அத்தா பவுண்டேஷன் மூலம், ஆயிரக்கணக்கான மக்களின் துயரத்தைப் போக்க நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். இன்னும் பலருக்கு எங்களின் உதவி தேவைப்படுகிறது, அவர்களைச் சென்றடைய உங்களின் ஆதரவை நாடுகிறோம்.
எங்களின் சிறு முயற்சியால் வாழ்வாதாரம் உயர்ந்த சில இதயங்களின் அனுபவங்கள்.
சுயதொழில் உதவி பெற்றவர்
பயன்பெறுபவர் கதை #2024-88
அத்தா பவுண்டேஷன் மற்றும் எங்களின் செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு இருக்கும் பொதுவான சந்தேகங்களுக்கான விடைகள் இங்கே.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு ரூபாயும் 100% நேரடியாக எங்களின் களப்பணிகளுக்கும், உதவித் திட்டங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நிர்வாகச் செலவுகள் எங்களின் தன்னார்வலர்கள் மூலம் பகிரப்படுகிறது.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு ரூபாயும் 100% நேரடியாக எங்களின் களப்பணிகளுக்கும், உதவித் திட்டங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நிர்வாகச் செலவுகள் எங்களின் தன்னார்வலர்கள் மூலம் பகிரப்படுகிறது.
நிச்சயமாக! சமூக மாற்றத்தில் அக்கறை கொண்ட யாராவது எங்களுடன் இணையலாம். எங்களின் சமூக வலைதளப் பக்கங்கள் அல்லது தொடர்பு எண் மூலம் எங்களை அணுகவும்.
தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பின்தங்கிய கிராமங்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். விரைவில் தமிழகம் முழுவதும் எங்களின் சேவையை விரிவுபடுத்த உள்ளோம்.
கல்வி உதவி, தரமான மருத்துவம், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய மூன்று துறைகளில் நிலையான மாற்றைத்தை ஏற்படுத்துவதே எங்களின் முதன்மை லட்சியம்.
நிச்சயமாக! சமூக மாற்றத்தில் அக்கறை கொண்ட யாராவது எங்களுடன் இணையலாம். எங்களின் சமூக வலைதளப் பக்கங்கள் அல்லது தொடர்பு எண் மூலம் எங்களை அணுகவும்.
தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பின்தங்கிய கிராமங்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். விரைவில் தமிழகம் முழுவதும் எங்களின் சேவையை விரிவுபடுத்த உள்ளோம்.
கல்வி உதவி, தரமான மருத்துவம், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய மூன்று துறைகளில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களின் முதன்மை லட்சியம்.
எங்களின் சேவைகள் அல்லது உதவி திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள வழிகளில் எங்களை தொடர்பு கொள்ளலாம்.